Home உலகம் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் – கையில் துப்பாக்கியுடன் ஈரானிய தலைவர் அயோத்துல்லா அலி கமெனி உரை!

இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் – கையில் துப்பாக்கியுடன் ஈரானிய தலைவர் அயோத்துல்லா அலி கமெனி உரை!

221
0
SHARE
Ad
அயோத்துல்லா அலி கமெனி

டெஹ்ரான் : இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) ஈரானில் ஒரு மசூதியில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போது ரஷ்ய தயாரிப்பான துப்பாக்கியை கையில் ஏந்தியிருந்த ஈரானிய மதத் தலைவர் அயோத்துல்லா அலி கமெனி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஈரான் பின்வாங்காது என்று வலியுறுத்தினார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நியாயப்படுத்திய அவர் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என்றும் எச்சரித்தார்.

1979 இஸ்லாமிய புரட்சியில் முக்கிய பங்கு வகித்த வரலாற்று சிறப்புமிக்க இமாம் கொமெய்னி மசூதியிலிருந்து அலி கமெனி தனது உரையை நிகழ்த்தினார்.

#TamilSchoolmychoice

கமெனி ஆயிரக்கணக்கான ஈரானியர்களிடையே உரையாற்றும்போது ரஷ்ய தயாரிப்பு டிராகுனோவ் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

இஸ்ரேல் “நீண்ட காலம் நீடிக்காது” என்றும் அலி கமெனி எச்சரித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் டெஹ்ரான், இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 200 ஏவுகணைகளைச் செலுத்தித் தாக்குதல் நடத்தியது.

ஈரானுக்குத் தக்க பதிலடி தருவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் எச்சரித்துள்ளார்.