Home நாடு பெர்சாத்து கட்சி தேர்தல்: ஹம்சா சைனுடின் புதிய துணைத் தலைவர்!

பெர்சாத்து கட்சி தேர்தல்: ஹம்சா சைனுடின் புதிய துணைத் தலைவர்!

246
0
SHARE
Ad
ஹம்சா சைனுடின்

கோலாலம்பூர்: அம்னோவில் இருந்து வெளியான துன் மகாதீர் முகமட்டும், டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் இணைந்து தொடங்கிய கட்சி பெர்சாத்து. ஒரு கட்டத்தில் மகாதீர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு முஹிடின் ஏகபோகத் தலைவராக உருவெடுத்தார்.

இந்த மாதம் பிற்பகுதியில் நடைபெறவுள்ள பெர்சாத்து கட்சித் தேர்தலில் அதன் முதல் இரண்டு தலைமைப் பதவிகளுக்கு போட்டியில்லாமல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய தலைவர் முஹிடின் யாசின் தொடர்ந்து தலைவராக இருப்பார்.  அதே வேளையில் தற்போதைய தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் கட்சியின் துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் துணைத் தலைவராக இருந்து போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட அகமட் பைசால் அசுமு, மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கான ஆறு போட்டியாளர்களில் ஒருவராக களத்தில் நிற்கிறார்.

நடப்பு உதவித் தலைவர்கள் ரொனால்ட் கியாண்டி மற்றும் முகமட் ரட்சி ஜிடின் ஆகியோரும் மீண்டும் தங்களின் பதவிகளைத் தற்காக்கப் போட்டியிடுகின்றனர்.

உதவித் தலைவருக்கான போட்டியில் நடப்பு தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ் உள்ளிட்ட மேலும் இருவர் போட்டியிடுகின்றனர்.