Home நாடு டத்தோ அசோஜன் தலைமையில், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழா!

டத்தோ அசோஜன் தலைமையில், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழா!

240
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக சிறந்த மலேசியத் தமிழ் நூல்களுக்கான பரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2023 வரையிலான மலேசியத் தமிழ் சிறுகதை நூல்களிலிருந்து சிறந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் பரிசு வழங்கப்படும்.

இன்று வெள்ளிக்கிழமை 4.10.2024-ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள தான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.அசோஜன் தலைமை தாங்குகிறார்.

இன்று அக்டோபர் 4-ஆம் நாள் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் பிறந்த தினமுமாகும்.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துவார்.