Home 13வது பொதுத் தேர்தல் செகாமட் தொகுதி: சுவா ஜூய் மெங் போட்டியால் சுப்ரா மீண்டும் வெல்ல முடியுமா?

செகாமட் தொகுதி: சுவா ஜூய் மெங் போட்டியால் சுப்ரா மீண்டும் வெல்ல முடியுமா?

663
0
SHARE
Ad

Datuk-Seri-Dr-S.-Subramaniam1ஏப்ரல் 9 – பல தவணைகளாக ம.இ.கா வெற்றிகரமாக வென்று வந்துள்ள ஜோகூர் மாநிலத்தின் செகாமட் தொகுதியை இந்த முறை ம.இ.கா சார்பாக மனித வள அமைச்சரும், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் இந்த முறை கடுமையான போட்டியை எதிர்நோக்குவார்.

காரணம், இந்த முறை அவரை எதிர்த்து களமிறங்கும் சுவா ஜூய் மெங் ஜோகூர் மாநிலத்தின் பிகேஆர் தலைவர் என்பதோடு, அருகிலுள்ள மூவார் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால் செகாமட் வட்டாரத்தில் செல்வாக்கும் உள்ளவர்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியில் இருக்கும்போது சுகாதார அமைச்சராகவும் பணியாற்றியவர் சுவா.

கேலாங் பாத்தா தொகுதியை ஜசெக எடுத்துக் கொள்ள அதற்குப் பதிலாக செகாமட் தொகுதியை பிகேஆர் கட்சிக்காக ஜசெக விட்டுக் கொடுத்துள்ளது.

“சுவாவிடமிருந்து ஆரோக்கியமான போட்டியை எதிர்பார்க்கின்றேன்” – டாக்டர் சுப்ரா

சுவா ஜூய் மெங் போட்டி குறித்து கருத்துரைத்த டாக்டர் சுப்ரா “சுவா தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர். கடந்த முறைகளில் எனக்காக வீடு வீடாக வந்து செகாமட் பகுதியில் எனக்காக பிரச்சாரம் செய்தார். இப்போது என்னை எதிர்த்துப் போட்டியிடுகின்றார். அவரிடமிருந்து ஆரோக்கியமான போட்டியை எதிர்நோக்குகின்றேன்” எனக் கூறியுள்ளார்.

இந்த தொகுதியை மீண்டும் வெல்வதற்கு தேசிய முன்னணிக்கு வாய்ப்பிருக்கின்றது என்றும் சுப்ரா குறிப்பிட்டிருக்கின்றார்.

பெரும்பான்மை சீன வாக்காளர்கள்

இருப்பினும், சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட செகாமட் தொகுதியில் கடந்த முறை 2,991 வாக்குகள் வித்தியாசத்தில்தான் சுப்ரா வென்றார்.

இந்த முறை 47,115 வாக்காளர்களைக் கொண்ட செகாமட் தொகுதியில் சீன வாக்காளர்கள் 46 சதவீதமும், மலாய்க்கார வாக்காளர்கள் 44 சதவீதமும் இந்திய வாக்காளர்கள் 10 சதவீதமும் இருக்கின்றனர்.

எனவே, ஏறத்தாழ 70 சதவீத சீன வாக்காளர்களைக் கவர்ந்து, மலாய்க்கார வாக்குகளில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை ஈர்க்க முடிந்தால் சுவா ஜூய் மெங் செகாமட்டில் சுலபமாக வெல்ல முடியும்.

இந்தியர் வாக்குகள் 10 சதவீதம் இருந்தாலும், இந்த வாக்குகள் தேசிய முன்னணிக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையில் சரிசமமாகப் பிரியும் எனத் தெரிகின்றது.

இதனால் சுப்ரமணியம் இந்த தொகுதியில் மீண்டும் வென்றுவர கடுமையான போட்டியை எதிர்நோக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.