Home 13வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு பதிவு செய்தவர்கள் வாக்களிக்க முடியாது

இந்த ஆண்டு பதிவு செய்தவர்கள் வாக்களிக்க முடியாது

504
0
SHARE
Ad

wan-ahmadபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 9- கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள்ளாக தேர்தலுக்கு வாக்காளர்களாக பதிவு செய்தவர்கள் வரும் பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கலாம். ஆனால் இந்தாண்டு பதிவு செய்த வாக்காளர்கள் தேர்தலுக்கு வாக்களிக்க முடியாது.

வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர்கள் பட்டியல்களில் சேர்க்க போதுமான நேரம் இல்லாததால் இந்த வருடம் தொடக்கம் ஜனவரி முதல் வாக்காளர்களாக பதிவு செய்த வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் டத்தோ வான் அகமட் வான் ஒமார் (படம்) கூறினார்.

வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவுக்கான நாட்களையும் நாளை நடைபெறும் ஒரு சிறப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று வான் அகமாட் சொன்னார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு 13, 291, 385 பேர் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் பதிவு பெற்ற வாக்காளர்கள் ஆவர்.

“இந்த முடிவே இறுதி முடிவு. யாரெல்லாம் கடந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலுக்கு பதிவு செய்தார்களோ அவர்கள் எல்லாரும் இந்தாண்டு வாக்களிக்க முடியும்” என்று வான் அகமாட் கூறினார்.

மேலும், அரசாங்க பதிவேட்டில் பதிந்த  வாக்காளர்களின் பட்டியல்கள் மறு ஆய்வுச் செய்யப்படும். காரணம் சமீபத்திய மாதங்களில் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக  புதுப்பிக்கப்படும் என்று வான் அகமட்  கூறினார் . 13ஆம் பொதுத் தேர்தலுக்கு 2.4 மில்லியன் புது வாக்காளர்கள் பதிந்துள்ளனர். சிலாங்கூர் மாநிலமானது, மிக கூடுதலான வாக்காளர்கள் பதிந்த மாநிலமாக கருதப்படுகிறது.