Home உலகம் வில்லியம்ஸின் வினோத ஆசை: மறுப்பு தெரிவித்த இளவரசி

வில்லியம்ஸின் வினோத ஆசை: மறுப்பு தெரிவித்த இளவரசி

603
0
SHARE
Ad

indexபிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் திருமணம் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற பின்னர் கேட் மிடில்டன் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், தனது வாரிசு இந்த பூமியில் பிறக்கும் இனிய தருணத்தை காணொலி எடுக்க இளவரசர் வில்லியம் திட்டமிட்டுள்ளார். ஆனால் இளவரசரின் இந்த வினோத ஆசைக்கு இளவரசி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரசவ காணொலி, சமூக விரோதிகளின் கையில் கிடைத்து அந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி விடக்கூடாது என்று கேட் மிடில்டன் அச்சப்படுவதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் பிரசவத்திற்கு முன்னர் மனைவியின் எண்ணத்தை மாற்றி காணொலி எடுத்தே தீருவது என்ற முடிவில் வில்லியம் தீர்மானமாக உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.