Home நாடு வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக சிகாமாட் ஆலயத்தில் டாக்டர் சுப்ரா சிறப்பு பூஜை!

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக சிகாமாட் ஆலயத்தில் டாக்டர் சுப்ரா சிறப்பு பூஜை!

995
0
SHARE
Ad

வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் இன்று சனிக்கிழமை தொடங்கியுள்ளன.

222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. சரவாக் மாநிலம் தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் மே 9-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான தமது வேட்புமனுவை சமர்ப்பிப்பதற்கு முன்னர், ஜோகூர், சிகாமாட், பூலோ காசாப் சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்து கொண்டார். இப்பூஜையில் அவரது துணைவியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.