Home Slider ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் வெற்றி

868
0
SHARE
Ad

635b9741-0a48-426e-902f-9d10026c7e731மெல்போர்ன்,ஜன.19 -ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மொரிடாவை எதிர்த்து விளையாடினார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் பெலரசின் விக்டோரியா அஸரென்கா, அமெரிக்காவின் ஜேமி ஹாம்ப்டனை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் அஸரென்கா வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

அதேபோன்று ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் 3வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6-4, 6-3, 7-5 என்ற நேர்செட்களில் செக்குடியரசின் ரடேன் ஸ்டேபானிக்கை விழ்த்தினார். இதேபோல் ஆண்டி முர்ரே ஸ்பெயினின் டேவிட் பெரர், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச், சுவிசின் ஸ்டானிஸ் லஸ் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷிகோரி ஆகியோரும் 3வது சுற்றில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.