Home Video விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் கேட்போமா?

விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடல் கேட்போமா?

1545
0
SHARE
Ad

சென்னை – விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் பாடலை அந்தப் படத்தின் படக்குழு நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

பாடல் வெளியிடப்பட்ட ஒரே நாளில் இதுவரையில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் யூ டியூப் தளத்தில் மட்டும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்துள்ளனர்.

“சிம்தங்கரன்” எனத் தொடங்கும் இந்தப் பாடல் புரியாத வார்த்தைகளின் கோர்வையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

#TamilSchoolmychoice

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் என்பதால், மூன்றாவது படமான ‘சர்கார்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சர்கார் படத்தின் முதல் பாடலைக் கீழ்க்காணும் இணைப்பில் கேட்டு மகிழலாம்: