Home இந்தியா மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

866
0
SHARE
Ad

சென்னை – இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சர்ச்சைக்குரிய மேகதாது அணையைக் கட்டுவதற்கு எதிராகக் கூட்டப்பட்ட தமிழக சட்டமன்றத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் அந்த அணையைக் கட்டுவதற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (படம்) முன்மொழிந்தார்.

இந்த சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஆகியோரும் உரையாற்றினர்.

உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கர்நாடக அரசு கட்ட முனைந்துள்ள மேகதாது அணைக்கு எதிராகவும் அந்த அணை கட்டப்பட ஆதரவு தந்த பாஜக மத்திய அரசுக்கு எதிராகவும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து உரையாற்றினர்.

#TamilSchoolmychoice

விவாதங்களின் முடிவில் மேகதாது அணைக்கு எதிரானத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப் பேரவையின் வரலாற்றில் அண்மையக் காலத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதுவே முதன் முறையாகும்.