டிஎன்பியின் தலைவரும், தலைமை நிருவாக அதிகாரியுமான டத்தோஶ்ரீ இர் அஸ்மான் முகமட் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடம் பேசி வருவதாகக் கூறினார்.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள ஒளியிழை வடம் (Fibre Optics) மூலமாக, அதன் அகண்ட அலைவரிசை சேவையைத் தரத் திட்டமிட்டுள்ளதாகவும், மலாக்காவில் இதன் மாதிரி செயல்முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதையும் கூறினார். மேலும், இது மாதிரியான மாதிரி செயல் திட்டங்கள் அதிகமான அளவில் தொடங்கப்படும் எனவும் அஸ்மான் தெரிவித்தார்.
Comments