கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை அனைவரையும் பொறுமை காக்குமாறு துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
வழக்கறிஞர், சித்தி காசிம், முகமட் அடிப் முகமட் காசிமின் மரணத்திற்கு வேறு ஒரு பின்புலம் இருக்கலாம் என சமூக ஊடகத்தில் குறிப்பிட்டதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருவதாகக் கூறினார்.
“ஆம், முன்னதாக அவர் தள்ளப்பட்டார் எனும் தகவல் வெளியாகியது. ஆயினும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு காத்திருப்போம்”, என அவர் செய்தியாளார்களிடம் நேற்று தெரிவித்தார்.
கடந்த, செவ்வாய்க்கிழமை, வழக்கறிஞர் சித்தி காசிமின் பதிவில், முகமட் அடிப் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகப் புலப்படாததையும், தீயணைப்பு துறை வேண்டுமென்றே அவர்களிடத்தில் உள்ள பலவீனத்தை மறைப்பதற்காக இவ்வாறு செய்வதாகவும், அவர் பதிவிட்டிருந்தார்.