Home நிகழ்வுகள் காஜாங்கில் தமிழ் இளங்கலை வகுப்பு தொடக்கம்

காஜாங்கில் தமிழ் இளங்கலை வகுப்பு தொடக்கம்

796
0
SHARE
Ad

tamilகோலாலம்பூர், ஏப்ரல் 1- கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் துன் சம்பந்தன் சாலையில் தமிழ்பண்பகத்தைத் தலைமையகமாகக் கொண்டு தமிழ் இலக்கியக் கழகம், இனம், மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பாடற்றி வருகின்றது.

தமிழகப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் இளங்கலை, முதுகலை வகுப்புகளையும், தேர்வினையும் நம் நாட்டிலேயே நடத்திடவும் தமிழ் இலக்கியக் கழகம் திட்டமிட்டு முனைப்பாக செயலாற்றி வருகிறது.

தமிழ் இலக்கியக் கழகம் காஜாங் தொடர்புக்குழுவின் ஏற்பாட்டில் 2003ஆம் ஆண்டு முதல் காஜாங் வட்டாரத்தில் இளங்கலை தமிழியல் வகுப்புகளை நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

இவ்வகுப்புகள் திங்கள் தோறும் இரு வாரங்களுக்கொருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் மணி 2.30 முதல் 5.30 வரை காஜாங் தமிழ்ப்பள்ளியில் நடைபெறுகின்றன.

தமிழகப் பல்கலைக்கழக பாடத்திற்கேற்ப இளங்கலை தமிழியல் பட்டக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இக்கால இலக்கியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியங்கள், இலக்கணம் மற்றும் சிற்றிலக்கியங்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழக வரலாறும் பண்பாடும், கல்வெட்டும் கோயில் கலையும் ஆகியவற்றை கற்றுத்தரப்படுகின்றது. இளங்கலை தமிழியல் பட்டக்கல்வி வகுப்பில் சேர்ந்து பயில விழையும் புதிய மாணவர்களின் பதிவு நடைபெறும்.

இவ்வகுப்பில் தமிழ்ப்பள்ளி அசிரியர்களும், எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களும், பதவி ஓய்வு பெற்றவர்களும், நாளிதழ் தட்டச்சுத்துறை முதலான ஊடகத்துறை பணியாளர்களும் அகவை கட்டுப்பாடின்றி நடத்தப்படும் இலக்கிய வகுப்பில் சேர்ந்து பயின்று தங்களின் இலக்கிய இலக்கண அறிவை வளப்படுத்திக் கொள்ளுமாறு தமிழ் இலக்கியக் கழகம், காஜாங் தொடர்பு குழுத்தலைவர்  ந.பொன்னுசாமி கேட்டுக்கொள்கிறார்.

மேல் விவரங்களுக்கு, ந.பொன்னுசாமி 016-6218870, அ.இராமன் 012-2041824, ஆ.குப்புசாமி 019-6155032 மற்றும் கரு.பன்னீர் செல்வம் 012-3056799 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.