Home நாடு “கேமரன் மலை தொகுதியை அம்னோ கேட்கவில்லை” – வேள்பாரி விளக்கம்

“கேமரன் மலை தொகுதியை அம்னோ கேட்கவில்லை” – வேள்பாரி விளக்கம்

682
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்றைய தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளின்படி கேமரன் மலை இடைத் தேர்தலில் மஇகா போட்டியிடாது என்றும் அதற்குப் பதிலாக அம்னோவே நேரடியாக கேமரன் மலையில் போட்டியிடும் என்றும் ஆரூடங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிட அம்னோவிடம் இருந்து கோரிக்கை எதனையும் பெறவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

கேமரன் மலை இடைத் தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளரை மட்டும் பரிந்துரைக்கும்படி அம்னோ கோரிக்கை விடுத்ததாகவும் தற்போது மஇகா சில வேட்பாளர்களை பரிசீலித்து வருவதாகவும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

யார் வேட்பாளர் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டவுடன் ஒரு முறையான அறிவிப்பு பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் விடுக்கப்படும் என்றும் வேள்பாரி மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.