Home நாடு 1எம்டிபி: ஜோ லோவை கண்டு பிடிக்க மலேசியா மற்றும் சீன தரப்பு சந்திப்பு நடத்தும்!

1எம்டிபி: ஜோ லோவை கண்டு பிடிக்க மலேசியா மற்றும் சீன தரப்பு சந்திப்பு நடத்தும்!

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் தொழிலதிபர் ஜோ லோவை கண்டு பிடிப்பதற்கு, மலேசியக் காவல் துறை சீன தரப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.

அச்சந்திப்பின் விபரத்தை முழுமையாக விவரிக்காமல், இதுவரையிலும் அவர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை எனவும், ஜோ லோவை தேடும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சிரமமான போதிலும், அரசாங்கம் ஜோ லோவை தொடர்ந்து தேடும் என பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 10) கூறியிருந்தார்.