Home நாடு இனக் கலவரங்கள் இல்லையென்றாலும், மக்களிடத்தில் பிரிவினைகள் உண்டு!- மகாதீர்

இனக் கலவரங்கள் இல்லையென்றாலும், மக்களிடத்தில் பிரிவினைகள் உண்டு!- மகாதீர்

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதில் கடந்த காலத் தவறுகளை நினைவில் கொள்ளுமாறு பிரதமர் மகாதீர் முகமட் நினைவூட்டினார். இதன் வாயிலாக, நாட்டின் முன்னேற்றம் மற்றும் செல்வத்தை சமமாக விநியோகித்து மக்கள் நன்மை அடைய வழிப் பிறக்கும்  என அவர் தெளிவுப்படுத்தினார்.

இந்நாட்டின் முக்கிய மூன்று இனங்களும், மற்றும் சபா சரவாக்கில் வாழும் இதர இனங்களும் ஒற்றுமையோடு வாழ்ந்தால் நாடு மேலும் முன்னேற்றக்கரமான இலக்கினை அடையும் என நம்புவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

1969-ஆம் ஆண்டில் நடந்த இனக் கலவரம் எவருக்கும் எந்த ஒரு நன்மையையும் தரவில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர், இதுவரையிலும் எந்தக் கலவரமும் நாட்டினில் இல்லை என்றாலும், இனப் பிரிவினைகள் இன்னும் தலைத்தூக்கியே இருக்கிறது எனக் கூறினார். இம்மாதிரியான சூழல் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பானது அல்ல என அவர் எச்சரித்தார்.