ஜகார்த்தா: கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி, கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் ஜகார்த்தா கடற்படையினால் கண்டு பிடிக்கப்பட்டது.
சுமார் 30 மீட்டர் ஆழத்தில் தஞ்சோங் கெராவாங் நீர்ப் பகுதியில் இப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த ஆய்வுகளுக்கு இப்பெட்டி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.
லயன் ஏர் JT610 ரக விமானம் 189 பேருடன், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, சுகார்னோ–ஹாத்தா விமான நிலையத்திலிருந்துப் புறப்பட்டு, காலை 6:20 மணியளவில் கடலில் விழுந்து நொறுங்கியது.