Home நாடு நாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்!

நாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்!

1015
0
SHARE
Ad

கூலாய்: புதிய பள்ளித் தவணைக் காலம், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்படாமல் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளன. இப்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சு படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கும் என துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பள்ளிகளை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு, அப்பள்ளிகளுக்கு இதுவரையிலும் கட்டுமானம் தகுதி தரச் சான்றிதழ் (Certificate of Fitness) கொடுக்கப்படாதக் காரணத்தை அமைச்சு கண்டறியும் என தியோ கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த பிரச்சினைகள் குறித்து பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி அமைப்புகளுடன் பேச வேண்டியுள்ளது” என அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், நாடு முழுவதிலும் சுமார் 16 தமிழ்ப் பள்ளிகள் பல்வேறு பிரச்சனைகளுக்காக, கட்டுமானப் பணிகள் முடிந்து விட்ட வேளையில் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய கட்டிடம் மற்றும் குத்தகையாளர்கள் சங்கத் தலைவர் வி.கே.ரகு கூறுகையில், அனைத்து பள்ளிகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாததால், அமைச்சிடம் அப்பள்ளிகளை ஒப்படைக்க இயலவில்லை என்றார்.