Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்

சிங்கப்பூர் தங்கும் விடுதி நிலத்துக்கு விலை 415 மில்லியன் அமெரிக்கன் டாலர்

692
0
SHARE
Ad

சிங்கப்பூர் – நிலம் கிடைப்பது அதிலும் வணிக மேம்பாட்டுக்கான நிலம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான சிங்கப்பூரில், நகர மறுமேம்பாட்டு ஆணையம் நகரின் மையப் பகுதியில் ஒரு தங்கும் விடுதிக்கான அனுமதி உள்ள நிலத்தை அண்மையில் ஏலத்துக்கு விட்டது.

அந்த நிலத்தை வாங்க எட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பரிந்துரைகள் சமர்ப்பித்திருந்தன. அதில் மிட் டவுன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அந்த நிலத்தை வாங்க மிக அதிகமான விலை கொடுக்க முன்வந்திருக்கிறது. 562.2 சிங்கப்பூர் டாலர் (அமெரிக்க டாலர் மதிப்பில் 415 மில்லியன்) இந்த நிலத்துக்கு விலை கொடுக்க அந்நிறுவனம் முன்வந்திருக்கிறது.

இந்த நிலம் கிளப் ஸ்ட்ரீட் என்ற சாலை வளாகத்தில்  அமைந்திருக்கிறது. இந்த வட்டாரம் மதுபான விடுதிகளும், உணவகங்களும் நிறைந்த பகுதியாகும்.

#TamilSchoolmychoice

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்க நிலம் ஒன்றை  சிங்கை அரசாங்கம் ஏலத்துக்கு விடுவது இதுவே முதன் முறையாகும்.