Home இந்தியா மோடிக்கு வழங்கப்பட்ட 1,900 பரிசுப் பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டன!

மோடிக்கு வழங்கப்பட்ட 1,900 பரிசுப் பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டன!

666
0
SHARE
Ad

புது டெல்லி: கடந்த ஆண்டுகளில் உலகெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை, முழுவதுமாக, தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெற வைக்கும் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.  

இந்நிலையில், சுமார் 1,900 பரிசுப் பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில்,  ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், பாரம்பரிய இசைக் கருவிகளும் அடங்கும்.

இந்த ஏலத்தில், பிரதமர் மோடிக்கு கிடைத்த வெள்ளித்தட்டு ஒன்று 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதற்கு அடுத்தபடியாக, மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் சிலையை, நரேந்திர மோடி வணங்கும் புகைப்படம் 22 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.