Home 13வது பொதுத் தேர்தல் டெங் விடுக்கும் சவால்களை இனி ஏற்கப்போவதில்லை – லிம் குவான்

டெங் விடுக்கும் சவால்களை இனி ஏற்கப்போவதில்லை – லிம் குவான்

656
0
SHARE
Ad

Lim-Guan-Eng-2பினாங்கு, ஏப்ரல் 2 – கடந்த இரு வாரங்களாக பாடாங் கோத்தா சட்டமன்ற தொகுதியை முன்வைத்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கும், பினாங்கு தேசிய முன்னணியின் தலைவர் டெங் சாங் யாவுக்குமிடையே நடைபெற்று வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லிம் குவான் தானே முன்வந்து, இனி டெங் விடுக்கும் சவால்களை ஏற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பினாங்கு மாநில தேசிய முன்னணியின் தலைவர் டெங் சாங் யாவ், எதிர்வரும் பொதுத் தேர்தலில்  ‘தான் விழுந்த இடத்திலேயே எழுந்து நிற்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

அப்படியானால், கடந்த 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில், அவர் சௌ கான் யாவ்விடம் பறிகொடுத்த சட்டமன்ற தொகுதியான  பாடாங் கோத்தாவில் இம்முறை களமிறங்கப்போகிறார் என்று எண்ணிய லிம், தான் டெங் விடுத்த சவாலை ஏற்று அவருக்கு எதிராக பாடாங் கோத்தாவில் போட்டியிடத்தயார் என்று கடந்த மார்ச் 28 ஆம் தேதி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 30 ஆம் தேதி பதிலறிக்கை வெளியிட்ட டெங், தான் லிம் விடுக்கும் சவாலை ஏற்பதாகவும், ஆனால் லிம் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் தான் போட்டியிடவேண்டுமென்றும், மேலும் அந்த தொகுதியையும் தானே முடிவு செய்வதாகவும் இரு நிபந்தனைகள் விடுத்தார்.

அதையும் ஏற்றுக்கொண்ட லிம், தனக்கு எதிராக டெங் போட்டியிடுவதாக இருந்தால் தான் பாடாங் கோத்தா சட்டமன்றத்தில் மன்றத்தில் மட்டும் போட்டியிடத்தயார் என்று தெரிவித்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த டெங், போட்டியிடும் தொகுதியை தாம் தான் தேர்வு செய்வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், லிம் குவான் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பால், இன்றோடு இந்த விவாதம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

டெங் விடுக்கும் சவால்களை இனி ஏற்கப்போவதில்லை 

இனி டெங் விடுக்கும் சவால்களை தான் ஏற்கப்போவதில்லை என்பதற்கு லிம் மூன்று காரணங்களைக் கூறுகிறார்.

முதலாவதாக, சட்டமன்ற தொகுதியில் மட்டும் போட்டியிட வேண்டும் என்று டெங் விடுத்த கோரிக்கையை தான் உடனடியாக ஏற்றும் கூட, டெங் இந்த போட்டியிலிருந்து பின்வாங்குகிறார் என்றும்,

இரண்டாவது, தான் சவாலே விடவில்லை என்று டெங் கூறுவது அவரின் பயத்தை காட்டுவதாகவும் லிம் தெரிவித்தார்.

இறுதியாக, தான் முன்பு மூன்று முறை வென்ற தொகுதியான பாடாங் கோத்தாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் போட்டியிட டெங்கிற்கு துணிவு இல்லை என்றும்,

எனவே தான் இனி டெங் விடுக்கும் இது போன்ற கோமாளித் தனமான சவால்களுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை என்றும் லிம் தெரிவித்தார்.