Home நாடு செமினி: இடைத் தேர்தல் நெருங்கும் வேளையில், காவல் துறையினருக்கு நிதி ஒதுக்கீடு!

செமினி: இடைத் தேர்தல் நெருங்கும் வேளையில், காவல் துறையினருக்கு நிதி ஒதுக்கீடு!

665
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் நேற்று (செவ்வாய்க்கிழமை) காவல் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் காவல் துறையினரின் நலனை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

நேற்று செமினியில் உள்ள கெம் பட்டாலியன் 4-க்கு வருகைத் தந்திருந்த அமைச்சர், காஜாங், செமினி, பெரெனாங் மற்றும் செராஸ் பகுதிகளில் உள்ள காவல் துறை தலைமையகங்களின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சுமார் 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை வழங்குவதாகக் கூறினார்.

காவல் துறை குடும்ப சங்கத்திற்கு 20,000 ரிங்கிட் பணமும், செமினியில் உள்ள போர்ப் படை துறைக் கட்டிடங்கள், சொத்துகள், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுக்காக மற்றுமொரு 300,000 ரிங்கிட்டை வழங்குவதாக அவர் கூறினார்.