Home Video அலாவுதீனின் அற்புத கேமரா: 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தில் அமைந்த முன்னோட்டம்!

அலாவுதீனின் அற்புத கேமரா: 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தில் அமைந்த முன்னோட்டம்!

1035
0
SHARE
Ad

சென்னை: மூடர் கூடம் திரைப்படம் வாயிலாக மக்களின் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் நவீன், தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தினை இயக்கி வருகிறார்.

மூடர் கூடம் படத்திற்குப் பிறகு இவர் இயக்கும், இந்தப் படத்திற்கு, எதார்த்த திரைப்படங்களை விரும்பும் இரசிகர்கள், இயக்குனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது இந்த முயற்சியை இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டக் காணொளி சிறப்பாக அமைந்துள்ளது என இரசிகர்கள் சமூகப் பக்கங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

தற்கால திரைப்பட உலகில் ஏராளமான புத்தம் புது தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்கூடு. இந்நிலையில் துல்லியமான ஒலி அமைப்பைத் தரக்கூடிய 4கே எச்டிஆர் அமைப்பில் இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகிலேயே முதன் முதலாக, 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தில் அமைந்த முன்னோட்டமாக, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்பட முன்னோட்டம் அமைகிறது.

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ் காணும் இணைப்பில் காணலாம். துள்ளியப் பார்வைக்கு யூடியூப் அமைப்பில் (settings), 4கே தெளிவுத்திறனை (resolution) சொடுக்கவும் :