Home நாடு செமினி: போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிப்பு!

செமினி: போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிப்பு!

853
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் களம் இறங்க இருக்கும் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்களை அவ்விரு கூட்டணிகளும் நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

தேசிய முன்னணித் தலைவர் முகமட் ஹசான் நாளை, பிளாசா டத்தோ முகமட் சாயிட் வளாகத்தில் தேசிய முன்னணி வேட்பாளரை அறிமுகப்படுத்த இருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி தனது வேட்பாளரை தாமான் பெலாங்கியில் அறிவிக்க உள்ளது.

இதனை ஒட்டி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்றிரவு செமினியில் அமைந்துள்ள தெஸ்கோ வியாபார மையத்திற்கு வருகைத் தர இருப்பதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிஎஸ்எம் கட்சி, அதன் வேட்பாளரை இன்றிரவு அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது. சமூக ஆர்வலர் குவான் சி ஹெங், தாம் செமினி இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேமரன் மலை இடைத் தேர்தலுக்குப் பின்பு, நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு, மிகவும் முக்கியமான இடைத் தேர்தலாக, இந்த தேர்தல் அமையும் என நம்பப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி அதிக பெரும்பான்மையில் வெற்றிக் கண்டது குறிப்பிடத்தக்கது.