Home நாடு 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சாத்து கட்சியில் இணைந்தனர்!

6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சாத்து கட்சியில் இணைந்தனர்!

680
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: அம்னோ கட்சியிலிருந்து வெளியான, ஆறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெர்சாத்து கட்சியில் இணைந்தனர். இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும், இரண்டு துணையமைச்சர்களும் அடங்குவர். இவர்களின் இந்த இணைப்பை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.

லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஹம்சா சைய்னுடின், டத்தோஶ்ரீ இக்மால் இஸ்ஹாம் அப்துல் அசீஸ் (தானா மேரா),  டத்தோ முகமட் பாசியா முகமட் பாகெ (சாபாக் பெர்னாம்),  டத்தோ ரோசோல் வாயிட் (உலு திரங்கானு), டத்தோஶ்ரீ அப்துல் லாதிப் (மெர்சிங்), மற்றும் டத்தோ ஷாபுடின் யாயா (தாசேக் குளுகோர்) ஆகியோர்இக்கட்சியில் இணைந்தனர்.

இந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விண்ணப்பத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே, அவர்களை கட்சியில் இணைத்ததாகவும், கட்சியில் அவர்கள் சாதாரண உறுப்பினர்களாக இருப்பார்கள் எனும் விதியை முன்வைத்து சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் எனவும் பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice