கோலாலம்பூர், ஏப்ரல் 2 – சபா மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஹம்ஸா தாயிப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கேட்டுக் கொண்டதற்hகிணங்க, அல்-ஏசான் அற நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ரிட்சுவான் சுலைமான் (படம்) நேற்று அம்பாங் மாவட்ட காவல்துறைத்தலைவர் தலைமையகத்தில் தமது 10 ஆதரவாளர்களுடன் சரணடைந்தார்.
விசாரணைக்கு உதவ சரணடைந்தார் ரிட்சுவான்
சபாவில் சூலு தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு சரண்டையும் முன், செய்தியாளர்களிடம் பேசிய ரிட்சுவான், கடந்த 2012 செப்டம்பர் 15,16 தேதிகளில், சூலு,ஜோலோ மற்றும் தென் பிலிப்பைன்ஸூக்கு சுல்தானாக விளங்கிய முயேட்ஸூல் லாயில் டான் கிராமை தான் சந்தித்ததும், பண உதவி செய்ததும் உண்மையே என்று ஒப்புக்கொண்டார்.
அவர் இவர் அல்ல
ஆனால் இப்போது சூலு தீவிரவாதிகள் நுழைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் ஜமால் கிராம், தாம் உதவி செய்த சூலு சுல்தானே அல்ல என்றும் ரிட்சுவான் தெரிவித்தார்.
சரணடைந்ததைத் தொடர்ந்து ரிட்சுவான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.