Home கலை உலகம் நகைச்சுவை நடிகர் ஏ.எம்.ஆர் பெருமாள் காலமானார்!

நகைச்சுவை நடிகர் ஏ.எம்.ஆர் பெருமாள் காலமானார்!

1113
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியத் தமிழ் நாடகங்கள், திரைப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள் என மலேசிய இந்தியர்கள் மத்தியில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் ஏ.எம்.ஆர். பெருமாள் இன்று வியாழக்கிழமை இறைவனடிச் சேர்ந்தார்.

நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெருமாள், இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது. தமது குணச்சித்திர கதாபாத்திரங்களினாலும், நகச்சுவைகளினாலும் மலேசிய மக்களைக் கவர்ந்து, தனக்கென்று ஓர் இடத்தினை வகித்து வந்தவர்.

இவரின் இந்த திடீர் மரணம் மலேசியக் கலைத்துறையினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழத்தியுள்ளது. சிறப்பான நடிப்பாற்றல், திறமைகளைக் கொண்டிருக்கும் மலேசியக் கலைஞர்களை கால ஓட்டத்தில் இம்மாதிரியாக நிகழ்வுகளினால் இழந்து விடுகிறோம்.

#TamilSchoolmychoice

சமூக ஊடங்களில் அவரின் படங்களும், இறப்புச் செய்தியும் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், மக்கள் தங்களின் அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்தாருக்குத் தெரிவித்து வருகின்றனர்.