Home உலகம் வங்காளதேச தீ விபத்தில் 60 பேர் பலி!

வங்காளதேச தீ விபத்தில் 60 பேர் பலி!

1195
0
SHARE
Ad

டாக்கா: வங்காளதேசத்தில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சௌக்பஜாரில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரசாயன பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கொன்று இக்கட்டிடத்தில் இருந்திருக்கிறது. அக்கிடங்கிலிருந்து ஏற்பட்ட தீயினால் அக்கட்டிடமே தீயிக்கு இரையானது. நேற்று புதன்கிழமை நிகழந்த இந்த சம்பவத்தில், அருகில் இருந்த கட்டடங்களுக்கும் தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த தீ விபத்தில் 60 பேர் வரையிலும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பொதுவாக இப்பகுதிகளில் வீடுகளும் கட்டிடங்களும் மிக நெருக்கமாக இருக்கும். இதன் காரணமாக மக்கள் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 2013-ஆம் ஆண்டு, டாக்காவிலுள்ள ராணா பிளாசாவில் நிகழ்ந்த தீ விபத்தில், 1,100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.