Home கலை உலகம் ஆஸ்கார்: பொயிமியன் ராப்சடி 4, பிளேக் பெந்தர் 3, ரோமா 3!

ஆஸ்கார்: பொயிமியன் ராப்சடி 4, பிளேக் பெந்தர் 3, ரோமா 3!

631
0
SHARE
Ad

ஹாலிவுட்: 91-வது ஆஸ்கார் திரைப்பட விருது விழாவில் பல்வேறு பிரிவின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன. எந்தெந்த பிரிவில் எந்தெந்த படம் மற்றும் கலைஞர்கள் விருதுகள் பெற்றுள்ளனர் என்ற முக்கிய விபரங்களை இங்கு பார்ப்போம்.

சிறந்த ஆவணப்படமாக, பிரி சோலோ (Free Solo) படத்துக்கு  விருது வழங்கப்பட்டுள்ளதுசிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கார் விருதுரோமா’ (Roma) படத்தின் அல்போன்சோ குயூரானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் பிரிவிலும்ரோமாதிரைப்படம் விருதை வென்றுள்ளது. 

சிறந்த இசைத் தொகுப்பு, இசைக் கலவை, படத்தொகுப்புக்கான விருதை பொயிமியன் ராப்சாடி படம் வென்றுள்ளது. மேலும், இத்திரைப்படத்தில் கதாநாயகன் ராமி மாலிக் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ஒலிவியா கோல்மேன், டி பேவரேட் (The Favourite) திரைப்படத்திற்காகப் பெற்றார். சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கார் விருது, இந்தியப் பெண்கள் குறித்த ஆவணப்படமான பீரீயட்தி என்ட் ஆப் சென்டென்ஸ் (Period: End of Sentence) என்ற படத்திற்கு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆஸ்கார் விருதில் கடைசியாக வழங்கப்படும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை, கிரீன் புக் (Green Book) திரைப்படம் வென்றுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த மஹேர்சாலா அலி துணை நடிகருக்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிளேக் பெந்தர் திரைப்படம் மூன்று விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளது. சிறந்த பின்னணி இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என மேலும் இரு விருதுகளை இப்படம் வென்றுள்ளதுஅதிக விருதுகளைப் பெற்று பொயிமியன் ராப்சாடி திரைப்படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்ற இத்திரைப்படம் வசூல் சாதனைப் படைத்தப் படமாகும்.