Home கலை உலகம் ஆஸ்கார்: ‘பிளேக் பெந்தர்’ 3, ‘ரோமா’ 2 விருதுகள்!

ஆஸ்கார்: ‘பிளேக் பெந்தர்’ 3, ‘ரோமா’ 2 விருதுகள்!

806
0
SHARE
Ad

ஹாலிவுட்: ஆஸ்கார் விருது போட்டியில் குதித்துள்ள, சூப்பர் ஹீரோ கதையான ‘பிளேக் பெந்தர்’ (Black Panther) திரைப்படத்திற்கு இதுவரையிலும் மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த இசைப் பிரிவுகளில் அத்திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆடை அலங்காரத்திற்காக விருதுப் பெறும் முதல் கருப்பின பெண்மணியாக ருட் கார்டர் கருதப்படுகிறார். சமூக ஊடகங்களில் இவருக்கு பாராட்டு மழை குவிகிறது. பிளேக் பெந்தர் திரைப்படத்திற்காக, தயாரிப்பு வடிவமைப்புப் பிரிவில் ஹென்னா பீச்லேருக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசை அமைத்த லுட்விக் யோரோன்சானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

லுட்விக் யோரோன்சான்
#TamilSchoolmychoice

வணிக ரீதியில் தயாரிக்கப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ படமான பிளேக் பெந்தர் சிறந்த படத்திற்கான போட்டியில் குதிப்பது இதுவே முதன் முறை. ஆயினும், இத்திரைப்படம் நான்கு பிரிவுகளில் வெற்றிப்பெறும் என ஊகிக்கப்பட்டுள்ளது.

அல்போன்சோ குயூரான்

அதிக எதிர்பார்ப்புடன் ஆஸ்கார் போட்டியில் களம் இறங்கிய ‘ரோமா’ திரைப்படத்திற்கு இதுவரையிலும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவுகளில் அப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு விருதுகளையும் அல்போன்சோ குயூரான் பெற்றார்.