Home நாடு பாஸ், அம்னோ இடையில் இனி மும்முனை போட்டிகள் இல்லை, செயற்குழு அறிமுகம்!

பாஸ், அம்னோ இடையில் இனி மும்முனை போட்டிகள் இல்லை, செயற்குழு அறிமுகம்!

732
0
SHARE
Ad

செமினி: இனி வரும் காலங்களில் எல்லா வகையான தேர்தல்களிலும் மும்முனை போட்டிகளைத் தவிர்ப்பதற்காக பாஸ் மற்றும் அம்னோ கட்சிகள் செயற்குழுவொன்றை அமைக்கப் போவதாக பாஸ் கட்சி இளைஞர் பகுதித் தலைவர் முகமட் காலீல் அப்துல் ஹாடி கூறினார்.

இடைத் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல்களில் இனி இரு முனை போட்டிகள் மட்டுமே நடக்கும். இதுதான் நம்பிக்கைக் கூட்டணியை பயம் காணச் செய்யும்” என அவர் தெரிவித்தார்.

இரு முனை போட்டிகள் நடைபெற்றால், சிலாங்கூர் மாநிலத்தை மட்டுமல்லாமல், இதர மாநிலங்களையும், மத்திய அரசையும் இந்த எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றிக் கொள்ளும் என அவர் மேலும் கூறினார். 

#TamilSchoolmychoice

15-வது பொதுத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.