Home நாடு “நான் பிரதமரானால், என் வழியில் குறுக்கிட வேண்டாம்”!- அன்வார்

“நான் பிரதமரானால், என் வழியில் குறுக்கிட வேண்டாம்”!- அன்வார்

879
0
SHARE
Ad

செமினி: பிரதமர் மகாதீரின் தலைமைத்துவத்தை தாம் ஆதரிப்பதாகவும், அவரது பணியில் ஒருபோதும் குறுக்கிடப் போவதில்லை எனவும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அதே போன்று, தாம் பிரதமராகப் பதவியேற்றப் பின்பு, அவருக்கு எவ்விதத்திலும் நெருக்கடிகளும், குறுக்கீடுகளும் ஏற்படாது என தாம் நம்புவதாக அன்வார் குறிப்பிட்டார். பல்வேறு தரப்புகள், குறிப்பாக எதிர்க்கட்சியினர், பிரதமர் மகாதீரை பிகேஆர் மற்றும் ஜெசெக கட்சிகள் உள்ளிருந்து கீழறுப்பு வேலைகளைச் செய்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டன.

இந்த விவகாரம் குறித்து அனைத்து நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களும் மறுப்பு தெரிவித்திருந்தனர். நம்பிக்கைக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பாஸ் தொடங்கியிருக்கும் சூழ்ச்சி இது என அன்வார் குறிப்பிட்டிருந்தார்.