Home நாடு உலகளவில் பசுமையை இழக்காத நகரங்களில் தைப்பிங் நகருக்கு 3-வது இடம்!

உலகளவில் பசுமையை இழக்காத நகரங்களில் தைப்பிங் நகருக்கு 3-வது இடம்!

2402
0
SHARE
Ad

ஈப்போ: உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பசுமையான நிலைத்தன்மையை விட்டுக் கொடுக்காத நகரங்களில் தைப்பிங் நகரம் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

தீபகற்ப மலேசியாவின் ஈரம் நிரம்பிய நகரமாக தைப்பிங் நகரம் குறிப்பிடப்படுகிறது. சிறந்த நகரங்களின் பிரிவில், நகரத்தின் பசுமையான நிலைத்தன்மையை முன்னிலைப்படுத்தி, மேலதிக சுற்றுலாத் திட்டங்களைத் தவிர்த்து இயற்கையாகவே நிலைத்திருந்தது இந்த விருதுக்கு வித்திட்டுள்ளது.

கடந்த மார்ச் 6- ஆம் தேதி, ஜெர்மனியில் நடைபெற்ற, 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த 100 நிலைத்தன்மை மாறாத நகரங்கள் நிகழ்ச்சியில் தைப்பிங் மாநகர மன்றத் தலைவர் டத்தோ அப்துல் ராகிம் முகமட் அரிப் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார்.