Home உலகம் தாய்லாந்து பொதுத் தேர்தல்: பாலாங் பிராசாராத் கட்சி முன்னிலை!

தாய்லாந்து பொதுத் தேர்தல்: பாலாங் பிராசாராத் கட்சி முன்னிலை!

1340
0
SHARE
Ad

பேங்காக்: தாய்லாந்தின் பொதுத் தேர்தலில், பாலாங் பிராசாராத் கட்சி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (உள்நாட்டு நேரம் இரவு 11.00 மணி) நிலவரப்படி முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சுமார் 7,594,820 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

93 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள வேளையில், அக்கட்சி முன்னிலையில் இருப்பதை தாய்லாந்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  சுமார், 469,829 வாக்குகள் பெரும்பான்மையுடன்அக்கட்சி முன்னிலையில் இருக்கிறது.

பிராயுத் சான்ஓசா இம்முறை அக்கட்சியைப் பிரதிநிதித்து போட்டியிடுகின்றார். கடந்த பொதுத் தேர்தலில் இருந்தே அவர் பிதமர் பதவிக்காக போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் தாக்க்ஷின் ஷினாவாத்ராவின் கட்சியான பிஹு தாய் கட்சி சுமார், 7,124,991 வாக்குகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது.

இருப்பினும், தேர்தல் ஆணையம் நாளை செவ்வாய்க்கிழமை வெற்றிப் பெற்ற அரசியல் கட்சியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.