Home நாடு அனுபவம் இல்லாத அமைச்சர்களினால் வேலை பளு அதிகரித்துள்ளது!- பிரதமர்

அனுபவம் இல்லாத அமைச்சர்களினால் வேலை பளு அதிகரித்துள்ளது!- பிரதமர்

571
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாம் முதல் முறையாக பிரதமரானதற்கும், தற்போது பிரதமர் பதவியினை வகிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, தாம் மூன்று மடங்கு அதிகமாக பணிச் சுமையை சுமந்து வருவதாக அவர் ஒப்புக் கொண்டார். இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, அனுபவமில்லாத அமைச்சர்களை அமைச்சரவையில் நியமித்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடிய விரைவில் இவர்கள் அனைவரும் அவர்களின் பணியின் சாரத்தை அறிந்து அதன்படி சுயமாக செய்லபடுவார்கள் என தாம் நம்புவதாகத் தெரிவித்தார். தமது 22 ஆண்டுக் கால அனுபவத்தை தற்போதைய அமைச்சர்கள் இன்னும் கேட்டறிந்து செல்வதாக பிரதமர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பல்வேறு விவகாரங்களில் இன்னும் சரியான முடிவுகள் எடுக்கப்படாமல் இருக்கிறது. அதற்குக் காரணமாக அமைவது, தற்போதைய அமைச்சர்களின் அனுபவமின்மையும், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் பக்குவம் இல்லாமையும்தான்” என பிரதமர் கூறினார்.

மேலும், கூறிய பிரதமர் எதிர்கட்சியினர் தங்களை குற்றம் கூறி, விமர்சிக்கும் அளவிற்கு அமைச்சர்கள் நடந்தும் கொள்கிறார்கள் எனக் கூறினார்.

தாங்கள் தற்போது அமைச்சரவையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவ்வப்போது மறந்து, இவர்கள் எதிர்கட்சியைப் போல நடந்துக் கொள்கிறார்கள் என அவர் கூறினார். இதனால், அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவதில் இவர்கள் தோல்வி அடைகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.