Home இந்தியா நடிகர் அக்‌ஷய் குமாருடன் மனம் திறந்த மோடி, அரசியலற்ற பேச்சு!

நடிகர் அக்‌ஷய் குமாருடன் மனம் திறந்த மோடி, அரசியலற்ற பேச்சு!

619
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில்,  பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் நேர்காணல் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நேர்காணலின் போது, அரசியல், தேர்தல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.

“ஒருபோதும் நான் பிரதமர் பதவியை வகித்து மக்களுக்காக சேவை செய்வேன் என நினைத்ததில்லை” என இந்த உரையாடலின் போது மோடி தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலை தாம் மேற்கொண்டதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்-ஷய் குமார் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.

எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தாலே, அதற்காக மகிழ்ச்சியடையும் குடும்ப பிண்ணியில் இருந்த வந்தவன் நான். மக்கள் ஏன் என்னை மிகவும் நேசிக்கிறார்கள் என்று நான் சில நேரங்களில் ஆச்சரியப்பட்டுள்ளேன்என மோடி குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

தாம் அலுவலக உதவியாளராக இருந்தது முதல் தற்போது வரை, கோபத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை என அவர் குறிப்பிட்டார்.

“தற்கால சூழலில் நான் எதைக் கூறினாலும் அது தவறாக கருதப்படுகிறது, ஆகவேதான் நண்பர்களிடம் கூட நான் நகைத்துப் பேசுவது அரிது” என மோடி மனம் திறந்துள்ளார். மேலும், எதிர்கட்சியிலும் தமக்கு நண்பர்கள் உள்ளனர் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறினார்.