Home நாடு ஷாஹிடான் காசிம் மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி!

ஷாஹிடான் காசிம் மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி!

743
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கங்கார்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 வயது இளம் வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு தந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிமிற்கு எதிரான வழக்கை கங்கார் அமர்வு நீதிமன்றம் இன்று புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

ஐந்தாவது சாட்சியாக தோன்றிய பாதிக்கப்பட்ட அப்பெண், இந்த விசாரணையை தொடர விரும்பாததால், இரண்டு தரப்பினருக்கும் இடையே நல்ல முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில், காரில் தம்முடன் இருந்த சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்ததன் பேரில் ஷாஹிடான் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

2017-ஆம் ஆண்டிற்கான பாலியல் குற்ற சட்டம் பிரிவு 14 கீழ் இவ்வழக்கு தொடரப்பட்டது. ஆயினும், தற்போது, அப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்து அவரை தற்காலிகமாக விடுவித்துள்ளது.