Home நாடு 15-வது பொதுத் தேர்தலில் துங்கு மக்கோத்தா இட்ரிஸ் இஸ்காண்டார் போட்டியிடலாம்!

15-வது பொதுத் தேர்தலில் துங்கு மக்கோத்தா இட்ரிஸ் இஸ்காண்டார் போட்டியிடலாம்!

1103
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடலாம் என துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இட்ரிஸ் இஸ்காண்டார் சுட்டிக் காட்டியுள்ளதாக சின் சியூ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இதனால், சமூகப்பக்கங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முவார் அல்லது மெர்சிங் தொகுதிகளில் தாம் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இளவரசர் போட்டியிடுவதில் தீவிரமாக இருந்தாலும் கூட அது உறுதி செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

மூவாரில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு 75 விழுகாடு உள்ளதாகவும், மெர்சிங்கில் போட்டியிடுவதற்கு 25 விழுக்காடு உள்ளதாக அவர் பதிவிட்டிருப்பதாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் முவார் நாடாளுமன்ற உறுப்பினராவார். மேலும், மெர்சிங் பகுதி அம்னோவின் லாதிப் அகமட்டுக்கு உரியதாகும்.

தமது சகோதரரான துங்கு மக்கோத்தா இஸ்மாயிலுக்கு எதிராக சைட் சாதிக் கருத்தினை வெளியிட்டப் பிறகு துங்கு இட்ரிஸ் இந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.