கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பத்தாவது நாள் விசாரணை இன்று திங்கட்கிழமை தொடங்கியது.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, அடுத்த மாதம் தொடங்க உள்ள ரம்லான் நோன்பு மாதத்தை ஒட்டி, முன்னாள் பிதரமர் நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான வழக்கு காலை 9 மணி தொடங்கி மதியம் 3.30 வரையிலும் நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலியின் முன்னிலையில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், ரமலான் மாதத்தில் முஸ்லீம்களின் நலனைக் கருதி தாம் இந்தக் கோரிக்கையை முன் வைப்பதாகக் கேட்டுக் கொண்டதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்து ஏற்றுக் கொண்டார்.