Home கலை உலகம் ராதிகாவின் புதிய தொலைக்காட்சி தொடர் ‘வாணி ராணி’

ராதிகாவின் புதிய தொலைக்காட்சி தொடர் ‘வாணி ராணி’

1483
0
SHARE
Ad
radthikaசென்னை,ஜன.21 ‘செல்லமே’ மெகா தொடரை தொடர்ந்து ராதிகா, ‘ராணி வாணி’ என்ற புதிய மெகா தொடரை தயாரித்து நடிக்கிறார். ‘சித்தி’ மெகா தொடரில் இரட்டை வேடத்தில் நடித்த ராதிகா, இரண்டாவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.அக்கா தங்கையான வாணி ராணி அண்ணன் தம்பிகளான சாமிநாதன் பூமிநாதனை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணியோ படிப்பு ஏறாத பெண்ணாக அதே சமயம் குடும்ப நிர்வாகத்தில் கெட்டிகாரியாகவும், அப்பாவியாகவும் இருக்கிறார்.கூட்டு குடும்பமாக வாழும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், இருவருக்கும் புகுந்த வீட்டில் ஒரு சிக்கல் வருகிறது. அந்த சிக்கலால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாகி அதன் மூலம் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரே வீட்டில், ஒரே குடும்பமாகவே வாழும், இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் வாணி ராணி மெகா தொடரின் கதை.இந்த தொடரில் ராதிகா சரத்குமாருடன், வேணு அரவிந்த், பப்லு, ரவிகுமார், புவனா, அருண், விக்கி, சுதீப், நிகிலா ராவ், பேபு நேஹா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராடான் மீடியாவின் வாணி ராணி கதைக்கு பா.ராகவன் வசனம் எழுதுகிறார். குமரேசன் திரைக்கதை அமைக்க, ஓ.என்.ரத்னம் இயக்குகிறார். காசிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.