Home Slider 2-ஆம் முறையாக ஒபாமா அதிபராகப் பதவியேற்பு

2-ஆம் முறையாக ஒபாமா அதிபராகப் பதவியேற்பு

853
0
SHARE
Ad

obamaஅமெரிக்கா,ஜன.21- பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இரண்டாம் தவணையாக வாஷிங்டனில்  பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் நீல அறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஒபாமாவுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவரது குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு அவரது முதல் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்று அவர் வெற்றிபெற்ற போதிலும் ஞாயிற்றுக்கிழமை மதியம்தான் அவரது இரண்டாம் பதவிக்காலம் தொடங்குகிறது.

மனைவி மிஷெலின் தந்தை அவருடைய தாயாருக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பரிசளித்த பைபிள் சாட்சியாக ஒபாமா பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவரது குடும்பத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் பைபிள் சாட்சியாக அவர் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

துணை நீதிபதி நியூயார்க் செல்ல வேண்டிய ரயிலுக்கு நேரமாகிவிட்டபடியால் நன்றியுரைகள் விரைவில் நிறைவுபெற்றன.

அமெரிக்க அரசியல் சாசனத்தில் துணை அதிபர் பதவியேற்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. புதிய அதிபர் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றாக வேண்டும் என்று அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ளபடி துணை அதிபரும் அதே நாளில் பதவியேற்கிறார். நாடாளுமன்ற விதிப்படி இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாதலால், அதிகாரபூர்வமாக அவர்கள் இருவரின் முதல் நாள் அலுவல் திங்கள்கிழமை தொடங்கும். திங்கள்கிழமை மீண்டும் அவர்கள் பதவிப் பிரமாணம் விமரிசையாக நடைபெறும்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கு படிக்கட்டில் பொது நிகழ்ச்சியாக பதவியேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இரு முறை பதவியேற்ற அதிபர்களில் ஒபாமா 7-வது ஆவார்.வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை அதிபராகப் பதவியேற்கிறார் பராக் ஒபாமா. உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.