Home நாடு பெர்சாத்து: அரசியலில் தொடர்ந்து நிலைத்திருக்க கட்சியில் உறுப்பினர்கள் அதிகம் தேவை!-பிரதமர்

பெர்சாத்து: அரசியலில் தொடர்ந்து நிலைத்திருக்க கட்சியில் உறுப்பினர்கள் அதிகம் தேவை!-பிரதமர்

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெர்சாத்து கட்சித் தலைவரும் பிரதமருமான மகாதீர் முகமட் கூறினார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் குறைவான் இடங்களில் மட்டுமே பெர்சாத்து கட்சி வென்றது. போட்டியிட்ட 52 இடங்களில் வெறும் 13 இடங்களை மட்டுமே பெர்சாத்து கட்சி வென்றதாக பிரதாம்ர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் பெருவாறியாக புதியவர்கள். மேலும், பெர்சாத்து கட்சியும் அப்போது புதிதான கட்சி. புதியதாக தொடங்கப்பட்ட கட்சியாக இருந்தால் வாக்காளர்களுக்கும் மக்களுக்கும் தெரிந்திருக்க முடியாதுஎன்று பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், தற்போது மூன்று ஆண்டுகளை நாங்கள் கடந்துள்ளோம். தொடர்ந்து கடுமையாக உழைத்தால்  நாட்டில் ஆளும் கட்சி நம் நிலையை தக்கவைத்து கொள்ள முடியும்என்றுஅவர் கூறினார்.

ஒவ்வொரு தொகுதியும் கட்சியின் உறுப்பினர்களை உயர்த்துவதற்கு கடுமையாக இயங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கட்சியில் உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு தேவை என்பதால், தொண்டர்கள் மிக முக்கியம். பொதுத் தேர்தல்களிலும், கட்சி வேலைகளை முன்னெடுப்பதற்கும் நம்க்கு அதிக சக்தி தேவைப்படுகிறது” என்று மகாதீர் கூறினார்.