இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் 22-வது ஷாங்காய் உலக திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு வருவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஆண்டு தொடக்கத்தில் டோக்கியோ திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது.
மிருதங்கம் செய்யக்கூடியவரின் மகன் ஒரு மிருதங்க வித்தகராகும் கனவில் போராடுவது குறித்து இப்படம் கையாளப்பட்டிருக்கும்.
19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படமொன்றினை வெளியிட்ட ராஜிவ் மேனனுக்கு சிறப்பான அங்கீகாரமாக இது அமைகிறது. அவரது இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படம் பெருமளவில் வெற்றியைப் பெற்றது.