Home Video ‘சர்வம் தாளமயம்’, தாளத்திற்கேற்ற நகர்வு!

‘சர்வம் தாளமயம்’, தாளத்திற்கேற்ற நகர்வு!

1653
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் ராஜிவ் மேனன், இயக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகரும், இசையமைப்பாளருமான, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் டோக்கியோவில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சாதகமான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ராஜிவ் மேனனின், அழகான காட்சிகளாலும், திரைக்கதையினாலும் படம் சிறப்பாக அமைந்துள்ளது என நடிகர்கள் தங்களின் சமூகப் பக்கங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.   

‘பீட்டர்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், தற்கால சூழலில் இளைஞர்கள் இசைத் துறையில் சாதிப்பதற்கு எவ்வாறான சூழல்களையும், இன்னல்களையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்பதைக் காட்டும் விதத்தில் படம் எதார்த்தமாக நகர்த்தப்பட்டிருக்கிறது என விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன. சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சர்வம் தாளமயம்’ எனும் பாடல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை கீழே காணும் இணைப்பில் காணலாம்: