Home உலகம் அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு, 21 பேர் பலி!

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு, 21 பேர் பலி!

776
0
SHARE
Ad

அமெரிக்கா: அமெரிக்காவில் கடுமையான அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வெளியேற முடியாமல் வீட்டில் அடைப்பட்டு இருக்கின்றனர். மேலும், வாகனங்களை இயக்க முடியாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர்.

மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் வீசிய கடுமையான பனிபொழிவின் காரணமாக விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது -49 பாகை செல்சியஸ்சாக குளிர் பதிவாகியிருக்கும் நிலையில், இதுவரையிலும் 21 பேர் உயிர் இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிக்காகோ நகரில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவினால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் உறைந்துக் காணப்படுகின்றன.