Home நாடு மலாய் சமூகத்தினரின் குறைகளை அரசாங்கம் செவிமடுக்கும்!- வான் அசிசா

மலாய் சமூகத்தினரின் குறைகளை அரசாங்கம் செவிமடுக்கும்!- வான் அசிசா

683
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மீது 60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியானது குறித்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்படும் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.

மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள அதிருப்தியானது உண்மையானதா அல்லது கற்பனையில் கூறப்பட்டதா என்பதை அரசாங்கம் ஆராயும் என அவர் கூறினார். ஆயினும், மலாய் சமூகத்தினரின் குறைகளை கேட்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“மலேசியர்களில் பெரும்பான்மையினர் மலாய்க்காரர்கள். ஒரு வேளை கருத்துக் கணிப்பில் குறிப்பிட்டவாறு , மலாய் சமூகத்தினர் அதிருப்திக் கொண்டிருந்தால், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கும்” என வான் அசிசா கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இல்ஹாம் செண்டர் மற்றும் பினேங் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய கருத்து கணிப்பொன்றில், 60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்திறன் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக நேற்று மலேசியா கினி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.