Home One Line P1 “முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே!”- வான் அசிசா

“முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே!”- வான் அசிசா

800
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை “ஒரு புதிய பாட்டிலில் வைக்கப்பட்ட பழைய ஒயின்” போன்றது என்று முன்னாள் துணை பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் வர்ணித்துள்ளார்.

1எம்டிபி ஊழலால் பல உறுப்பினர்கள் இன்னும் “கறைபட்டுள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.

ப்ளூம்பெர்க் செய்தித்தளத்திற்கு அளித்த பேட்டியில், முன்னாள் கூட்டரசுப் பிரதேசங்களான முப்தி சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி, மத விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிப்பதை அவர் ஆதரிப்பதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், மற்ற அமைச்சரவை உறுப்பினர்களின் நியமனம் கேள்விக்குரியதே என்று அவர் கூறினார்.

“பெரும்பான்மையானவர்கள் அம்னோவிலிருந்து வந்தவர்கள். அவர்கள் 1எம்டிபி நெருக்கடியால் இன்னும் கறைபட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

நேற்று தனது அமைச்சரவையை அறிவித்த பிரதமர் மொகிதின் யாசின்,ஊழல் மற்றும் பிற குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களை சேர்க்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் 1எம்டிபி நெருக்கடி வெளிவந்தபோது அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் அந்நேரத்தில் இருந்ததாக வான் அசிசா கூறினார்.

“அவர்கள் அதைத் தடுக்கவோ அல்லது இன்னும் நெருக்கடிக்குள் சிக்குவதைத் தடுக்கவோ எதுவும் செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.