வான் அசிசா, பண்டார் துன் ரசாக் தொகுதியில் போட்டி

    573
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர் : அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான வான் அசிசா வான் இஸ்மாயில் மீண்டும் 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

    சிலாங்கூரிலுள்ள பாண்டான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அசிசா தொகுதி மாறி கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.