Home One Line P2 ‘டிராப் சிட்டி’: ஹாலிவுட்டில் ஜிவி பிரகாஷ், முதல் தோற்றம் வெளியானது!

‘டிராப் சிட்டி’: ஹாலிவுட்டில் ஜிவி பிரகாஷ், முதல் தோற்றம் வெளியானது!

616
0
SHARE
Ad

சென்னை: நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஹாலிவுட் திரைப்படத்தில் கால் பதித்துள்ளார்.

கடைசியாக இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

அதையடுத்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, போன்ற பல படங்கள் அவர் கை வசம் உள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஹாலிவுட்டில் தயாராகும் ‘டிராப் சிட்டி’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளியானது.

‘டிராப் சிட்டி’ என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் திரைப்படமாகும்.

மேலும், இப்படம் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரண மனிதனாகப் போராடும் பாடகரின் கதையைச் சொல்கிறது.

ரிக்கி பர்ச்சலின் இப்படத்தை இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.