தி எட்ஜ் மார்கெட்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அவர் மலேசியாவிற்கு பெரும் உதவியைச் செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், 1எம்டிபி ஊழல் குறித்த விவகாரங்கள் வெளிவராமலேயே போயிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.
அவ்வாறு, டி எட்ஜ் மார்கெட்ஸ் மற்றும் டி சரவாக் ரிபோர்ட்ஸ் நிறுவனத்திற்கு 1எம்டிபி குறித்த விவகாரங்களைத் தந்ததால், 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் தாய்லாந்தில் சிறைப்பிடிக்கப்பட்டார்.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும், தாய்லாந்து மன்னர், ராஜா மஹா வாஜிராலொங்கோர்ன், மன்னிப்பு வழங்கியதால் 18 மாதத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.